
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு!
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.