சென்னை மாங்காடு பகுதியில் 2017-ம் ஆண்டு வசித்து வந்தவர் பாபு. அவருடை மகள் ஹாசினி. அவருக்கு வயது 6. 2017ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியே விளையாட போன ஹாசினி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்பவரை கைது செய்கிறார். காவல்துறையின் விசாரணையில், ‘சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார்.
பின்னர், துணிப்பையில் எடுத்துச் சென்று தாம்பரம் – மதுரவாயில் நெடுஞ்சாலையில் எரித்துள்ளார்’ என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் தஷ்வந்த்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.. அவர், வெளியே வந்தநிலையில், தஷ்வந்த் தாய் சரளாவும் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தஷ்வந்த்தை காவல்துறையினர் குற்றம்சாட்டினர். மும்பை தப்பிச் சென்ற தஷ்வந்த்தை, மும்பையில் வைத்து காவல்துறையினர் செய்தனர்.
2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ஹாசினி கொலைவழக்கில் தீர்ப்பளித்த விசாரணை நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை வழங்கியது. மேலும், 46 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்ற தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் தூக்கு தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது. அதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் தஷ்வந்த். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாக இல்லை என்றும், டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்றும் கூறி தஷ்வந்தை விடுதலை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.