அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சூப்பர் எல்நினோ: தமிழகத்தில் நீடிக்கும் கடும் வெயில்; உள்மாவட்டங்களில் இரவில் மழை – எச்சரிக்கும் வெதர்மேன்!

2026-ம் ஆண்டில் எல் நினோ மேலும் வலுப்பெற்று, அக்டோபர்–டிசம்பர் காலகட்டத்தில் மிகவும் வலுவான நிலையை எட்டக்கூடும் என்று இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அதன் தாக்கம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும் என்பதால், தமிழகத்தில் கடும் வெயில் நீடிக்கும் என்று எல் நினோவை மட்டும் வைத்து உறுதியாகக் கூற முடியாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகலில் சுட்டெரிக்கும் வெயில்:

செப்டம்பர் 28, 2026-க்கான தனது தினசரி வானிலை அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர் எல்நினோ காரணமாக நீடித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் 2-3 வாரங்கள் வரை நீடிக்கும் எனவும் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட சுமார் 3 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியல் வரை அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர் எல் நினோ காரணமாக ஏற்படக்கூடிய முதற்கட்ட தாக்கம் அக்டோபர் 15 வரை நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நண்பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் அனல் காற்றும் வீசக்கூடும் எனக்கூறப்பட்டுள்ளது.

உள் மாவட்டங்களில் இடியுடன் மழை:

சூப்பர் எல்நினோ தாக்கத்தால் பகல் நேரங்களில் அதீத வெயில் சுட்டெரிப்பதுடன், வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டடங்களில் வெப்பச்சலனம் ஏற்படும். இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரவித்துள்ளார். மேலும் இன்று மற்றும் நாளை( செப்.28- 29) மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் உருவாகும் இந்த மழை அனைத்து பகுதிகளிலும் ஒரே சீராக இருக்காது என்றும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைக்கான வாய்ப்பு தற்போது தென்படவில்லை என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதனால் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒருபுறம் பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், மறுபுறம் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பச்சலன மழையும் என மாறுபட்ட வானிலை நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V