அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இந்தியாவின் உதவிகளிலுள்ள சிக்கல்களை ஆராய இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்பட்டுள்ள நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்காக தனிப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த தனிப்பிரிவானது ஜனாதிபதி செயலகத்தில் ஸ்தாபிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான ஜயந்த பெர்ணான்டோவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்பட்டுள்ள நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்துக்கொள்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த திட்டங்கள் தொடர்பில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை புதுப்பித்து, அந்த திட்டங்களை உரிய முறையில் முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய அமைச்சுக்களின் கீழ் குறித்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தித்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை மீள் நிர்மாணம் செய்துக்கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தினால் 450 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும், இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh