அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சிறைத் தண்டனை வழங்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனுக்கு, மரண தண்டனை விதித்த சவுதி நீதிமன்றம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அனோஜனின் விடுதலை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் தொடர்பில் பேஸ்புக்கில் தவறாக பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்த சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 30 லட்சம் ரியால் தண்டப் பணம் செலுத்துமாறு சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்தநிலையில், அனோஜனின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு அமைய, சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம், இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்திருந்தது.

மேன்முறையீட்டு தீர்ப்பை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அந்த நாட்டு நீதிமன்றம், அனோஜனுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை வலுப்படுத்தி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சவுதி அரேபியா நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு இன்று வரை அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படாத நிலையில், இந்த விடயம் சமூக, அரசியல் ரீதியில் பாரிய பேசுப் பொருளாகியுள்ளது.

நடந்தது என்ன?

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த உற்சவத்தில் கலந்துக்கொள்வதற்காக வடக்கிலிருந்து பாத யாத்திரை மூலம் பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்.

இவ்வாறு பாத யாத்திரை வந்தவர்களுடன் அவர்களுடைய சுப்ரமணியம் என்ற நாயும் பாத யாத்திரை வந்திருந்தது.

கல்முனை பகுதியில் வைத்து, இஸ்லாமிய இளைஞர் ஒருவர், சுப்ரமணியம் என அழைக்கப்படும் நாயின் மீது தாக்குதல் நடாத்தியிருந்தார்.

சுப்ரமணியம் என்ற நாயின் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட புகைப்படம்

குறித்த இஸ்லாமிய இளைஞன் நாயை தனது காலினால் தாக்கும் படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இஸ்லாமிய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

நாயின் மீது தாக்குதல் நடாத்தி இளைஞன், தான் அறியாமல் செய்த தவறை ஒப்புக் கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில், நாயின் மீது தாக்குதல் நடாத்திய படமொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்த நிலையில், அந்த படத்திற்கு கீழ் சவுதி அரேபியாவில் வேலை செய்யும் அனோஜன் என்ற இளைஞன் கருத்தொன்றை பகிர்ந்திருந்தார்.

இந்த கருத்தானது, நபிகள் நாயகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த பின்னணியில், இந்த விடயம் பாரிய பேசுப் பொருளாக மாறியது.

இஸ்லாமியர்கள் மாத்திரமன்றி, அனைத்து சமூகத்தினரும் இந்த கருத்தை வன்மையாக கண்டித்திருந்தார்கள்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜன், வேலை செய்யும் நோக்கில் சவுதி அரேபியா சென்றிருந்த ஒருவர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜன்

இவ்வாறான நிலையில், தமிழ் மொழியில் பதிவேற்றப்பட்டிருந்த இந்த பதிவை, சிலர் அரபு மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவிட்டு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

அரபு மொழியில் பதிவேற்றப்பட்ட குறித்த பதிவை அடிப்படையாகக் கொண்டு, சவுதி அரேபியா போலீஸாரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அனோஜன், கடந்த ஜுன் மாதம் 30ம் தேதி அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அனோஜன், சமூக வலைத்தளங்களின் ஊடாக தமது தவறை ஏற்று, மன்னிப்பு கோரியிருந்த போதிலும், அவரை விடுவிக்க அந்த நாட்டு அரசாங்கம் தயாராகயிருக்கவில்லை.

அனோஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஜுலை 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் செலுத்த வேண்டும் என சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, குடும்பத்தாரின் கோரிக்கைக்கு அமைய, சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, அனோஜனின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவருடன் குடும்பத்தார் சந்திப்பு

அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், அனோஜனின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் கொழும்பில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அனோஜனின் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

சிவராசா அனோஜன் எதிர்நோக்கியுள்ள பிரச்னை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு, அவரது பெற்றோர் இதன்போது கொண்டுவந்துள்ளனர்.

தனது மகனின் விடுதலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயலுமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான ராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனின் தாயிக்கு ஆறுதல் கூறும் எதிர்கட்சித் தலைவர்

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, அனோஜனின் பெற்றோர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சவுதியிலுள்ள இலங்கை தூதுவரை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்ட எதிர்கட்சித் தலைவர், அனோஜன் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் மற்றும் அவரின் விடுதலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.

அத்துடன், சவுதி சிறையிலுள்ள சிவராசா அனோஜனுடன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொலைபேசி ஊடாக கலந்துரையாடல்களை நடாத்தியிருந்ததை, எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரியவருகின்றது.

”எனக்கு எந்த தண்டனை வழங்கினாலும், அந்த தண்டனை இலங்கைக்குள் வழங்கப்பட வேண்டும். அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இலங்கையிலுள்ள பேஸ்புக் கணக்கொன்றில் வெளியிடப்பட்ட கருத்தொன்றுக்கே நான் கமாண்ட செய்திருந்தேன். சவுதி அரேபியாவிலுள்ள பேஸ்புக் கணக்கிற்கு நான் கமாண்ட் செய்யவில்லை. இந்த தண்டனையை சவுதி அரசாங்கத்தினால் வழங்குவது நியாயமற்றது. எமது அரசாங்கம் தான் எனக்கு தண்டனை வழங்க வேண்டும். அதனை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் எனக்கு தண்டனை வழங்கப்பட்டால், அதனை நான் மனப்பூர்வமான ஏற்றுக்கொள்வேன்.” என சவுதி சிறையிலுள்ள அனோஜன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் தான் அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, விடுதலைக்கான கடுமையான முயற்சிகளை எடுப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர், அனோஜனிடம் இதன்போது உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி நடாத்திய அவசர கூட்டம்.

அனோஜனின் விடுதலை தொடர்பில் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடாத்திய அவசர சந்திப்பு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் எடுக்கக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அவசர கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், சவுதி அரேபியாவிலுள்ள அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், அனோஜனின் உறவினர்கள், இலங்கையிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்திடம் அனோஜனின் விடுதலையை கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh