அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

INDIA – US வர்த்தக ஒப்பந்தம்: ‘வாழ்வாதாரத்தை பறிக்கிறது பாஜக’ – டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் வாழ்வாதாரம் பறிபோகும் எனக்கூறி, போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்கின்றனர். போலீஸார் அவர்களை தடுத்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்தியா–அமெரிக்கா இடையிலான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பா.ஜ.க அரசின் இந்த இருநாடுகள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று டெல்லியில் ‘கிசான் மகாபஞ்சாயத்’ எனும் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே, பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் மற்றும் வாகனங்களில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், டெல்லி போலீஸார், துணை ராணுவத்தினர், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தி, டெல்லிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்து வருகின்றனர்.

பேரிகார்டுகள் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிற்பதுடன், கண்ணீர்ப் புகைக்குண்டு வீசும் வாகனங்களுடன் இருக்கும் போலீஸார் விவசாயிகளைத் தடுத்து வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் சொல்வதென்ன?

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டிதலைவரான சர்வன் சிங் பந்தேர், ‘‘நாங்கள் அமைதியான முறையில் டெல்லி செல்ல முயன்றபோதும், ஹரியானா அரசு எங்களைத் தடுத்து நிறுத்துகிறது. இது ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பா.ஜ.க அரசின், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தம் இந்திய வேளாண்மை, பால் உற்பத்தி, சிறு வியாபாரங்கள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இதனை எதிர்த்துப் போராட வந்தால் எங்களைத் தடுத்து நசுக்குகிறார்கள்,’’ எனக்கூறியுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் பாஜக…

மற்றொரு விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் (ஷஹீத் பகத் சிங்) தலைவர் தேஜ்வீர் சிங், ‘‘எந்த முன்னறிவிப்பும் இன்றி ஷம்பு எல்லையை ஹரியானா காவல்துறை முழுமையாக மூடியுள்ளனர்,’’ எனக்குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டத்தில் கலந்துள்ள விவசாயிகள், ‘இந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் மலிவான வெளிநாட்டு வேளாண் பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்து, உள்நாட்டு விவசாயிகளின் வருமானம் வெகுவாக குறையும். மேலும், இது வேளாண்மை மட்டுமின்றி பால் உற்பத்தி, தொழில், டிஜிட்டல் வர்த்தகம், மின் வணிகம், அரசு கொள்முதல், அறிவுசார் சொத்துரிமை மற்றும் சேவைத் துறைகளையும் பாதிக்கும். இங்கு விளைவிக்கப்படும் பொருள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்வதை பா.ஜ.க அரசு ஊக்குவிக்க வேண்டும்.

இதற்கு மாறாக தங்களின் சுயலாபத்திற்காக அமெரிக்காவில் பொருட்களை இங்கு விற்பனை செய்வதை ஊக்குவித்து, இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதரத்தை பறிக்கும் கொடுஞ்செயலைச் செய்கிறார்கள்,’’ எனப் பேட்டியளித்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா வேண்டி பேரணி நடத்திய போது, போலீஸார் தடியடி நடத்தி கலைத்திருந்தனர். இன்று மீண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வந்து கொண்டிருப்பது, டெல்லியில் மிகவும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்