அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை- பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, எல்ஜேபி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்), சிபிஐ, சிபிஎம், விகாசீல் இன்சான் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இருபெரும் கூட்டணிகளுக்கு மத்தியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ‘ஜன் சுராஜ்’ கட்சியும் போட்டியிடுகிறது. புதிய கட்சியான ‘ஜன் சுராஜ்’ இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை மாற்றி அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர். அதில், வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் வேட்பாளர் பட்டியலில், தொழில்முறை வல்லுநர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அனைத்து சமூக மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், அனைத்து சமூகப் பிரிவுகளில் இருந்தும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து, பிராசாந்த் கிஷோர் எந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில், அவர், தேஜஸ்வி யாதவின் கோட்டையான ராகோபூர் தொகுதியில் போட்டியிடுவார் என பலத்தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இரவு ஜன் சுராஜ் கட்சி ராகோபூர் தொகுதிக்கு சஞ்சல் சிங் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், ‘நடப்பு பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை. இது கட்சி சேர்ந்து எடுத்த முடிவு. கட்சியின் நீண்ட கால வளர்ச்சிக்காக நான் கட்சிப் பணிகளில் ஈடுபடவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.  அதே நேரத்தில் தனது கட்சியான ஜான் சுராஜ் க்கு 150 சட்டமன்றத் தொகுதிகளை இலக்காக நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஜன் சுராஜ் கட்சி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்திற்குள் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என 100 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்கள் சட்ட விரோதமாக சேர்த்த செல்வத்தை பறிமுதல் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk