அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

வாகனத்தை முந்தி சென்று போலீஸாரை அச்சுறுத்திய MPக்கு 18 மாத சிறை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருடம் (18 மாதங்கள்), சிறைத் தண்டனை வழங்கி பதுளை மாவட்ட மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பு வழங்கியுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தி, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் தேதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், பண்டாரவளை நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வண்டியை, போலீஸ் ஜீப் வண்டியொன்று முந்தி சென்றுள்ளது.

இதையடுத்து, போலீஸ் ஜீப் வண்டியை பின்தொடர்ந்து சென்று, அதனை தடுத்து நிறுத்தி, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக போலீஸாரினால் பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதியான பந்துல ரத்நாயக்க ஆகியோர் நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ரசிக்க கருணாதிலக்க, மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சாரதி பந்துல ரத்நாயக்க, ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.

இந்த பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருக்கு நீதிமன்றம் இவ்வர்று ஒன்றரை வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh