அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

22 ஆண்டுகளானாலும் நீங்கா வடுவாக உள்ள கும்பகோணம் பள்ளி தீ விபத்து; பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்தது ஸ்ரீ.கிருஷ்ணா உதவி பெறும் தொ்டக்கப்பள்ளி. மற்ற பள்ளிகளைப் போன்று விசாலமாக இல்லாமல் மிகவும் குறுகலாக இருந்ததோடு மாடியில் கூரைப் போடப்பட்டு செயல்பட்டிருந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு யாராலும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் மதிய உணவுக் கூடத்தில் இருந்த தீ பள்ளியில் உள்ள ஓலைக்கூரைக்குள் பரவியதால் தீ பிடித்து எறிய ஆரம்பமாயிற்று. குறுகிய படிக்கட்டுகள், தீ விபத்து போன்ற அவசர கால வழி போன்ற எதுவும் இல்லாத காரணத்தினால் இப்பள்ளியில் பயின்ற குழந்தைகள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். அளவுக்கு மீறி அதிகப்படியான மாணவர்கள் இருந்தமையால் பலரால் வெளியேற வர முடியவில்லை. இதன் காரணமாக மழலை சொல் கூட மாறாத 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் அதிக காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்பிரச்சனைக்குக் காரணமாக பள்ளி நிர்வாகி உள்பட 10 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த விபத்து நடைபெற்ற ஜூலை ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உயிரிழ்ந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு தீபம் ஏற்றியும், மலர்தூவியும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று 22 வது ஆண்டான ஜூலை 16 ஆம் தேதியில் மக்கள் பள்ளி வளாகத்திற்கு சென்று உயிரிழந்த தன்னுடைய குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத் தி வருகின்றனர். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எங்களால், நாங்கள் பெற்ற குழந்தைகளை மறக்கதமல் தவிப்பதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.

இந்த பெருந்துயர சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் பள்ளிகளில் தீயணைப்பு பாதுகாப்பு, அவசரகால வெளியேறும் வழிகள், கட்டிடப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான பேரிடர் விழிப்புணர்வு பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V