அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கரூர் விஜய் மாநாடு- என்ன நடந்தது?

கரூரில் விஜய்யின் கூட்டத்தில் என்ன நடந்தது? அரசியல் கட்சித் தலைவர்கள் என்னென்ன தெரிவித்துள்ளார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், 41 பேர் உயிரிழப்புக்கு யார் செய்த தவறு காரணம் என்பது இணையத்தில் கேள்விப் பொருளாகியுள்ளது. விஜய், ரசிகர்கள் தமிழக அரசின் மீதும், செந்தில் பாலாஜி மீதும் குற்றச்சாட்டுகின்றனர். இன்னொருபுறம் திமுகவினர், விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்திற்கு வந்ததும், தவெக தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல், மரம், கூரைகளின் மீது ஏறியதும்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.. உண்மையில் என்ன நடந்தது? என்பதைத் தெரிந்துகொள்வோம்..

தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுமதிகோரி கடிதம் அளிக்கப்படுகிறது. அந்தக் கடிதத்தில், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவெக சார்பில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா அல்லது உழவர் சந்தை திடல் பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டக் காவல்துறை சார்பில் வேலுசாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டது.

காலை 9 மணி அளவில் நாமக்கலில் விஜய் சந்திப்பு, மதியம் 12 மணி அளவில் கரூரில் விஜய் சந்திப்பு என்று மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் சென்னையிலிருந்து சுமார் 9 மணி அளவில் தனி விமானத்தில் திருச்சிக்குப் புறப்பட்டார். திருச்சியில் சாலை மார்க்கமாக நாமக்கலுக்குச் சென்றார். நாமக்கலில் சுமார் மதியம் 2 மணி அளவில் உரையாற்றினார். இங்கே கரூரில் அதிகாலை முதலே கூட்டம் கூடத் தொடங்கியது. சுமார் 4 மணிக்கு மேலே கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் 5 மணிக்கு மேலே பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த பிபிசி செய்தியில், ‘விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக தகரக் கூரையின் மீது இளைஞர்கள் ஏறியதால் கூரை பிய்ந்துவிடுமோ என்று அதன் கீழிருந்த மக்கள் நெருங்கிக் கொண்டு நகர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளது.

விஜய் பேசும் மின்தடை ஏற்பட்டது. அதனால், நெரிசல் ஏற்பட்டது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்த மின்வாரிய தலைமைப் பொறியாளர், ‘விஜய் பேசும்போது மின்தடை செய்யப்படவில்லை. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களால் பொறுத்தப்பட்ட ஃபோக்கஸ் விளக்கு கூட்டநெரிசலை அணைந்தது. தவெக மாவட்ட நிர்வாகம் சார்பில் விஜய் பேசும்போது மின்சாரத்தை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை அப்போதே நிராகரிக்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கொடுத்த விளக்கத்தில், ’500 போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விஜய்யின் பேருந்து வரும்போது ஒரு 50 மீட்டருக்கு முன்பே நிறுத்தி இங்கிருந்தே பேசலாம் என்று டி.எஸ்.பி கூறியதை விஜய் தரப்பு மறுத்துவிட்டது. இதுகுறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம் காவல்துறையின் விளக்கத்தை அண்ணாமலை ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. களத்தில் அத்தனை போலீசார் இல்லை. காவல்துறையினர் பாதுகாப்பில் கோட்டைவிட்டுள்ளனர். விஜய்யும் அவரது பிரச்சாரத்தை வடிவத்தை மாற்றியிருக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரே ஒரு இடம் என்று பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய சீமான், ‘ரசிகர்களிடம் ஒழுங்கு, நெறியை எதிர்பார்ப்பது கடினம். விஜய் என்ன பேசுகிறார் என்பதை கேட்காமல், நசிகர்கள் கத்திக் கொண்டே இருப்பார்கள். அது தான் ரசிகர்களின் மனநிலை. விஜயை 2,3 முறை பார்த்து விட்டால் ரசிகர்களின் ஆர்வம் குறைந்து பக்குவத்திற்கு வருவார்கள். தேவைப்பட்டால் விஜயை சந்தித்து ஆறுதல் சொல்வேன். சம்பவம் நடந்த நேரத்தில் விஜய் மனநிலை எப்படி இருந்திருக்கும்? என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமும், தடுமாற்றமும் இருந்திருக்கும். அதை குறையாக கூற முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உண்மை கண்டறிய அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக யாரும் வதந்தியையும், அவதூறையும் பரப்பவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk

Leave a Reply