2020-இல் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையேயான மோதலால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பாதிப்பு தற்போது அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் இந்தியா, சீனாவுக்கு இடையேயான நட்பாக மாறியுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுவதாக இந்தியா அறிவித்தது. மேற்குவங்கத்திலிருந்து வரும் 26ஆம் தேதி இண்டிகோ நிறுவனம் காங்க்சவ்வுக்கு முதல் விமானத்தை இயக்குகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.