பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘Dude’ படம் வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடகராக அறிமுகமாகிறார். சாய் அபயங்கர் தன்னுடைய ‘Independent’ பாடல்கள் வழியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அவ்வகையில் சமீபத்தில் ‘பல்டி’ படம் மூலியமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரின் இசையில் வெளியாக உள்ள Dude படத்தில் சிங்காரி என்ற பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடியுள்ளார். இந்தப் பாடல் 04/10/2025 மாலை 6 மணியளவில் வெளியாகியுள்ளது. தற்போது இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என்ற ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.