அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு!

“எனக்கு எப்பொழுது சிலிண்டர் கிடைக்கும்? இப்ப நாங்கள் சிலிண்டர் புக் செய்தால் இன்னும் எத்தனை நாட்கள் கழித்து கிடைக்கும்? பிளாக்கில் சிலிண்டர் வாங்கிக்கொள்ளலாமா”? என்பது போன்ற பல கேள்விகளைத் தான் பெரும்பாலான மக்கள் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் கேட்டு வருகின்றனர். அந்தளவிற்கு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு முற்றிலும் முடங்கியதன் விளைவு தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் பல மூடப்பட்டுவிட்டது. இதே சமயம் வீடுகளுக்கு வாங்கப்படும் சிலிண்டர்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் படி ஒரு சிலிண்டர் வாங்கி 25 நாட்களுக்குப் பிறகு தான் மற்றொரு சிலிண்டருக்கு புக் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.  சிலரது வீடுகளில் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சிலிண்டர் பயன்படுத்துவதால் 15 நாட்களிலேயே காலியாகிவிடும்.

இந்த சூழலிருந்து தப்பிக்க இல்லத்தரசிகள் பலர் யோசித்து வருகின்றனர். ஒரு சிலர் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியது போன்று விறகு அடுப்பிற்கு மாறிவருகின்றனர். அதே சமயம் நகரத்தில் உள்ள மக்கள் புகையில்லா அடுப்பு, பாய்லர் அடுப்புகளின் விலை என்னவாக இருக்கும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ற இணைய தேடல்களில் இறங்கிவிட்டனர். 

இதற்கிடையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர்கள், மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk