அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கை சிறைச்சாலையில் தொடரும் மோதல் – சிறைக்குள் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்பதாக தகவல்

இலங்கையின் மஹர சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது மோதலாக மாறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்திற்கும் அதிகமானோர் காயமடைந்து ராகமை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக, போலீஸார், விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

சிறைச்சாலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை பின்னர், கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான அமைதியற்ற சூழ்நிலையாக மாறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிறைச்சாலை கட்டிடத் தொகுதிக்குள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்குள் இருந்து புகை வெளியேறுவதையும் காண முடிகின்றது.

மேலும், சிறைச்சாலைக்குள் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டதை அறிந்த கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலை வளாகத்தை சூழ ஒன்று திரண்டு, கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனால், சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மஹர சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருந்திரளாக ஆயுதம் ஏந்திய பெருமளவான போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் துப்பாக்கி சூடு நடாத்தப்படும் சத்தங்களை கேட்க முடிகின்றது என கைதிகளின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றமை தொடர்பில் எமது செய்திப் பிரிவு போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியது.

அவ்வாறான எந்தவித தகவல்களும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் பதிலளித்தார்.

மோதல் ஏற்பட்டமைக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட காட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் 5ம் மற்றும் 6ம் தேதிகளின் மோதல் சம்பவமொன்று ஏற்பட்டிருந்தது.

கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்த மோதல் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்திருந்ததாக மரண பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருந்தது. அத்துடன், ஏனைய 11 பேரும் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்திருந்ததாகவும் மரண பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில், மஹர சிறைச்சாலையில் இன்று அமைதியற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh