அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

செஸ்ஸில் இந்தியா சதம் …

இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை அனுஜ் ஸ்ரீவாத்ரி பிடித்துள்ளார். சதுரங்க விளையாட்டில், கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) என்ற பட்டம் சதுரங்க விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய பட்டமாகும், இதில் இந்தியா 100 கிராண்ட் மாஸ்டர்களை பெற்று அரிய சாதனை படைத்து உள்ளது. இதனை, “சதுரங்கத்தில் இந்தியா சதம் அடித்துள்ளது…” என பிரதமர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பாரட்டி உள்ளார். மேலும் 1988 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று கொடுத்த விஸ்வநாத் ஆனந்த், தீபாவளி வாழ்த்துடன், “நான் பட்டம் வாங்கி 40 வது ஆண்டில் 100 கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருப்பது மகிழ்ச்சி…” என அனுஜ்யை பாராட்டி வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 வயதான அனுஜ் ஸ்ரீவாத்ரி, அம்மாநிலத்தின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 7-வது ஏசியான் பிளஸ் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

அனுஜ் தனது 5-வது வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார், பின் 2019 -ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்றார். பி.டெக் பட்டதாரியான அவர் கல்லூரி முடிவில் வேலை வாய்ப்பு கிடைத்தபோதிலும், செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்லும் நோக்கில் அந்த வேலையை நிராகரித்து முழுநேர சதுரங்க ஆட்டக்காரராக அனுஜ் மாறினார். ஆசிரியர்களான தந்தை அசோக் குமார் ஸ்ரீவாத்ரி மற்றும் தாய் மனோரமா ஸ்ரீவாத்ரி ஆகியோரின் ஆதரவுடன் கிராண்ட் மாஸ்டர் இலக்கை அடைய கடுமையாக போராடினார்.

மேலும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்கான செலவுகளை ரேபிட் செஸ் தொடர்களில் வென்ற பரிசுத் தொகை மற்றும் செஸ் பயிற்சி அளிப்பதன் மூலம் கிடைத்த வருமானங்களை கொண்டே அனுஜ் சமாளித்தார். கஜகஸ்தான் அல்லது கதார் போன்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஒரு தொடருக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் நிதிச்சுமை அவருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

பிலிப்பைன்ஸ் தொடரின் முதல் சுற்றில் அனுஜ் தோல்வியடைந்த போதிலும், அடுத்தடுத்த சுற்றுகளில் அவர் தனது ஆட்ட உத்திகளை மாற்றி அமைத்து கையாண்டு எதிரிகளை திணறடித்தார். தொடரின் இறுதியில் 6 வெற்றிகள் மற்றும் 2 சமன்களுடன் , 7/9 புள்ளிகள் பெற்று அனுஜ் முதலிடத்தை பிடித்தார்.

பலமுறை கிராண்ட்மாஸ்டர் நார்ம்ஸ் எட்டும் வாய்ப்பை நெருங்கி பட்டத்தை தவறவிட்டதாக குறிப்பிட்ட அனுஜ், இறுதியாக இப்பட்டத்தை வென்றது மிகுந்த மகிழ்ச்சியயும், நிம்மதியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட இலக்கு 2600 ரேட்டிங் புள்ளிகளைக் கடப்பதும், முடிந்தவரை அதிக தொடர்களில் வெற்றி பெறுவதும் தனது முக்கிய நோக்கங்கள் என கிராண்ட்மாஸ்டர் அனுஜ் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of J.Jayabathuri

J.Jayabathuri