அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நோபல் பரிசை வென்ற நவனீதம் பிள்ளை, இலங்கை தமிழர்களுக்கான குரலாக இருந்தது எப்படி?

இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் ஈழத் தமிழர்களை நேரடியாக களத்தில் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் உயரீய நபராக அமைதிக்கான நோபல் பரிசை தன்வசப்படுத்திய நவனீதம் பிள்ளை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக நவனீதம் பிள்ளை, 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார்.

இவர் பதவி வகித்த காலக் கட்டத்திலேயே, இலங்கையில் நிலைக்கொண்டிருந்த சுமார் 30 வருட கால உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.

இலங்கையில் போர் மௌனிக்கப்பட்டாலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்றும் மௌனிக்கப்படவில்லை.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இறப்புடன் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில், மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவனீதம் பிள்ளை இருந்தமை பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட தருணத்தில், தமிழர் ஒருவரே மனித உரிமை ஆணையகத்தில் இருந்தமை இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைய, நவனீதம் பிள்ளை, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி இலங்கையை வந்தடைந்தார்.

அவரின் இலங்கை விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ் அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்த நவனீதம் பிள்ளை, போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட இலங்கையின் வடப் பகுதி தமிழர்களை சந்திப்பதற்கான கள விஜயத்தில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரையும் சந்தித்திருந்தார்.

நவனீதம் பிள்ளையின் இந்த நடவடிக்கையானது சர்வதேச ரீதியில் பாரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ மூன், இலங்கையின் வடப் பகுதிக்கு விஜயம் செய்ததன் பின்னர், ஐநாவின் உயரீய பதவியிலுள்ள ஒருவர் விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.

நவனீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர், அவர் சந்தித்த பலரை இலங்கை பாதுகாப்பு படையினர் அச்சுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பிலும், நவனீதம் பிள்ளை கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்திய நவனீதம் பிள்ளை, அப்போதைய இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் அவர் கூறியிருந்தமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

எனினும், நவனீதம் பிள்ளையின் இந்த கருத்துக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

அதேவேளை, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஐநா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், 2014ம் ஆண்டு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைய விசாரணை குழுவொன்றும் நவனீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நவனீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்தமை வரவேற்கத்தக்கது என இலங்கை தமிழர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நோபல் பரிசில் ஊடாக, இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கும், இலங்கை தமிழர்களுக்கான நீதிக்கானவும் நவனீதம் பிள்ளை தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றார்.

கிளிநொச்சியில் 2013ம் ஆண் ஆகஸ்ட் 27ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் - படம் (Eranga Jayawardena/The Associated Press
கிளிநொச்சியில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் – படம் (Eranga Jayawardena/The Associated Press
Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh