அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ஜோதிடர் நியமனம் முதல் RTI விலக்கு வரை;தொடர்ச்சியாக ‘U-Turn’ அடிக்கும் தவெக அரசு! கேள்விக்குள்ளாகும் நிர்வாகத்திறன்…

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைத்த பிறகு, ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமனம் முதல் ஆர்டிஐயில் இருந்து சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்களித்த அரசாணை ரத்து என ஆறு முறைக்கு மேல் தவெக அரசு ‘U-Turn’ அடித்துள்ளது. தொடர்ச்சியான பின்வாங்குதலால், தவெக அரசின் நிர்வாகத்திறன் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே, அரசு வெளியிட்ட சில உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து திரும்பப் பெறப்படுவதும், நிறுத்தி வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.

அவற்றில் சமீபத்தியதும் முக்கியமானதுமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தொடர்பான உத்தரவு.

செப்டம்பர் 21ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், தமிழ்நாடு அரசின் Public (Law and Order) Department-ஐ RTI சட்டத்தின் Section 24 (4)-ன் கீழ் விலக்கு பெறும் Intelligence and Security Organisation ஆக அரசு குறிப்பிட்டிருந்தது. இந்தத் துறையின் பணிகளில் காவல் துறை நடவடிக்கைகள், ‘லாக்கப்’ மரணங்கள், காவல் சித்திரவதை குற்றச்சாட்டுகள், சாதி மற்றும் மத மோதல்கள், அரசியல் போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் அடங்குகின்றன.

இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

மேல்மா SIPCOT: வெளியான அறிவிப்பு, பின்னர் வாபஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா SIPCOT தொழிற்பூங்கா Phase-III விரிவாக்கத்திற்காக 22.16 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், செப்டம்பர் 18ம் தேதி அந்த நில எடுப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக பின்னர் SIPCOT நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு முன்னதாகவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகளுடன் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நில விவகாரத்தை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

காலை உணவுத்திட்ட சுற்றறிக்கை

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்குத் தேவையான சில அடிப்படை வசதிகள் மற்றும் பொருட்களை பள்ளி நிர்வாகங்கள் அல்ல துதலைமை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. பின்னர், தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்தது.

சென்னை சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்தம்

சென்னை மாநகராட்சியில் குறைவாக மதிப்பிடப்பட்டதாகக் கருதப்பட்ட சொத்துகளுக்கு மறுமதிப்பீடு செய்து 3.49 லட்சம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. மக்களிடமிருந்து எதிர்ப்புகள் மற்றும் மனுக்கள் வந்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி அந்த மறுமதிப்பீட்டு நடவடிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் நிறுத்தியது. ஏற்கெனவே உயர்த்தப்பட்ட தொகையை செலுத்தியவர்களுக்கு அது அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணமாக சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி இதை பொதுவான “சொத்து வரி விகித உயர்வு” எனக் கூறவில்லை; குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துகளின் மறுமதிப்பீடு என விளக்கியிருந்தது.

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கையும் வாபஸ்

ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள மார்ச்கிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்குமாறு வட்டாட்சியர் அய்யாசாமி, வருவாய் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.

இதேபோல், தமிழ்நாட்டில் இடதுசாரி அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை விமர்சனத்துக்குள்ளான நிலையில், அது 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெறப்பட்டது.

முதல்வர் அலுவலகத்தில் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை Special Officer on Duty (OSD-Political) ஆக நியமித்தது தான், தவெக அரசின் முதல் சர்ச்சையாக இருந்தது.

தொடர்ச்சியாக ‘U-Turn’ அடிக்கும் தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசின் சில முடிவுகள் முதலில் அறிவிக்கப்படுகின்றன, பின்னர் அவை கடும் விமர்சனத்தைச் சந்தித்த பிறகு அரசு தனது முடிவில் இருந்து ‘U-Turn’ அடித்து பின்வாங்கி ஓடுவதும் தொடர்கதையாகவே உள்ளது.இது அரசியல் களத்தில் தவெக அரசு மீதான கடுமையான விமர்சனத்தை உருவாக்கி வருகிறது.

“அரசாணை அல்லது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் போதுமான ஆலோசனை நடத்தப்படுகிறதா?”, “முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஆய்வு போதுமானதாக இருக்கிறதா?”, “எதிர்ப்புக்குப் பிறகே முடிவுகள் மாற்றப்படுகிறதா?” என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. மேலும், தவெக அரசின் தொடர்ச்சியான இதுபோன்ற ‘U-Turn’களால், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத்திறமை மீதே அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்