அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகம் அமையுமா? அரசாணை ரத்தாகுமா? எதிர்ப்பார்ப்பில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின்னதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரியம், வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 25.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியாகியிட்டது.

புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியான நாளிலிருந்து திமுக, சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பட்டினம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புதிய தலைமை செயலகம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மீனவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்யாவிடில் மாபெரும் போராட்டத்தை கையில் எடுப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வருகின்ற செப்டம்பர் 29 ஆம் தேதி அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகமா?

இந்த சூழலில் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் பணிக்கு இன்னும் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விரைவில் விரிவான விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார். தற்போது புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து ஆய்வு மட்டுமே நடைபெற்று வருகிறது. புதிதாக தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்பது கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையாகும். அனைத்து அரசு தலைமை அலுவலகங்களும் சென்னை மாநகரில்தான் அமைந்துள்ளன.

எனவே, அதற்கு அருகிலேயே வேறு எந்தெந்த இடங்களில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று தெரிவித்தார். குறிப்பாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் அரசு நிச்சயமாக செய்யாது என தெரிவித்திருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V