அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைந்தது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 2026- 27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா, விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணைய திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம் மற்றும் எம்.எல்.ஏ களுக்குக் கார் வழங்குவது தொடர்பான மசோதாக்கள் உள்பட 12 மசோதாக்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தவெக அரசில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களும் ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த ஆளுநர் அர்லேகர், 6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், அடுத்த 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் என மொத்தம் 12 மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஒப்புதல் அளித்த 12 மசோதாக்களும் தற்போது சட்டங்களாகியுள்ளன. அவை செப்டம்பர் 15ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V