அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சட்டம் – ஒழுங்கு முதல் ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்அதிரடி பதிலுரை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் பேசிய முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார். நாட்டின் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையைத் தவறாகப் பயன்படுத்தியும், பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் அரசியல் நாகரிகத்தைக் கடுமையாக சாடியதுடன், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சமூகத்தில் ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்றால், ஒடடுமொத்ம மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்க்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது என்றும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்களும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது என தெரிவித்தார்.

பாதுகாப்பு தான் மாநிலத்தின் முன்னேற்றம்…

பொதுவாக ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதன் மூலமாகவோ அல்லது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள் வருவதால் மட்டும் இல்லை. அதற்கு மாறாக ஒரு மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும், அந்த மாநிலத்தில் எவ்வளவு பயம் இல்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது என தெரிவித்தார். எங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதோ? நிச்சயம் அங்கு தொழில் முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை வேலைவாய்ப்புகளை அதிகம் பெற முடியும் என தெரிவித்தார்.

மாநிலத்தின் உள்ள சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்முறை உற்ற நண்பராக இருக்கும். அதே வேளையில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற எதிரியாகவும் இருக்க வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு காவலரும் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார். முதல்வர் முதல் உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தேவை இல்லாத தலையீடுகள் இருக்கக்கூடாது என வலியுறுத்தி இருப்பதாக விஜய் பேசியுள்ளார்.

தி.மு.க உறுப்பினர் ஒருவர் பேசுகிறார், மக்கள் தி.மு.க-வுக்கு ஓட்டு போடாததால் நல்ல சாவே வராது என்று பேசியிருகிறார். இதே மக்கள்தான் 50-60 வருடமாக அவர்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள் எப்படி? அவர்கள் வாயில் இப்படி ஒரு வார்த்தை வருகிறது. என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்றும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை எப்போது இவர்களுக்கு இல்லையோ, இவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்விதானே வரும் என சட்டப்பேரவையில் விஜய் கூறியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V