அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் பேசியது என்ன? எதிர்க்கட்சிகள் விவாதிக்க என்ன காரணம்? முழு விபரம் இங்கே!

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னதாக நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. பதவியேற்பின் போது ஏற்பட்ட சச்சரவுகளுக்குப் பதலளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இரண்டும் முதலிலேயே பாடப்பட்டது. பின்னர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். இவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசித்தார்.

தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் முன்னதாக ஆட்சியில் இருந்தவர்களால் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளது. கடன்சுமை அதிகரித்து இருந்தாலும் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இதற்கேற்றார்போல் தான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பொதுமக்களுக்காக மூன்று உத்தரவுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக 200 யூனிட்டுக்கு இலவச மின்சாரம், மாநிலத்தின் அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினை உருவாக்கவும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையினை அமைத்துள்ளார்.

மேலும் ஆளுநர் உரையின் போது, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும், எக்காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காது எனவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும், மாநிலத்தின் நிதி நிலைமையை விரைவில் சீரமைத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சியை பெருமளவில் கருத்தில் கொள்ளும் எனவும், இதற்காக வெற்றித்தமிழகம் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவித்திடவும், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இந்த தமிழக வெற்றிக்கழகம் அமைந்திடும் என ஆளுநர் உரையில் கூறியுள்ளார். தமிழகத்தில் எத்தனை தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறித்து ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தைத் தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தவெக அரசு உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளா். அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி கடுமையாக கண்காணிப்பு வழிமுறைகளை உட்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் புகழாரம்:

தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், கட்சித் தொடங்கியே இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது என்று ஆளுநர் பாராட்டியுள்ளார். ஜனநாயகத்தின் மக்களே நாயகர்கள் என முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் உரையை சுட்டிக்காட்டி ஆளுநர் பேசினார்.

ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்:

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையானது ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதோடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை நாம் வரவேற்போம் என்றும் இரு முறை பாடியதில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையில் எதிர்ப்பார்த்த அளவுக்கு புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V