அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் ; அரசின் அலட்சியம் என எதிர்க்கட்சிகள் சாடல்!

பெண்கள் பாதுகாப்பு எங்கே? என தேடும் அளவிற்கு நாளுக்கு நாள் தமிழகத்தில் பாலியல் துன்புறுத்துதல், பாலியல் வன்கொடுமை கொலைகள் தினமும் அரங்கேறிவருகிறது. சில வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டாலும், சில குற்றங்கள் மறைக்கப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோடு மட்டுமின்றி மணிமங்கலம், காட்டுப்பாக்கம், திருவள்ளுர், பெரம்பூர்,
,அம்பத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளில் வடமாநிலத்தவர்களால் மற்றும் வீட்டின் அருகாமையில் உள்ள நபர்களால் அதிகமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரக்கூடிய நிலையில், சிங்கப்பெண் அதிரடி படை எங்கே போய்விட்டது? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா? என்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றனர். குறிப்பாக தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! என பதிவிட்டுள்ளார். இதோடு மு.க ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவர்களை சில தினங்களில் மட்டும் 15 போக்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதைத் தவிர குறுகிய காலத்திற்குள் 20க்கும் மேற்பட்ட படுகொலைகள் என மொத்தம் 207 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக் காப்போம் என்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தவெக ஆட்சியில் காணாமல் போய்விட்டதாக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V