அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

மாதவிடாய் காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை; கேரள அரசின் புதிய அறிவிப்பு!

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதோடு வி.டி.சதீசன் முதல்வராக பதவியேற்றார். புதிதாக அமைத்த அரசு கொள்கைகள் தொடர்பாக மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையாற்றினார். அப்போது கேரளத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். அதோடு மாணவிகள் நலனுக்கான எங்களின் உறுதிப்பாடு, மாதவிடாய் கண்ணியம் எனும் திட்டத்தின் வாயிலாக மாணவிகள் உடல் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படும் எனவும் சட்டப்பேரவை உரையில் பேசினார்.

இதையடுத்து பெண் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து மாதவிடாய் எடுக்கும் மாணவிகள் தங்களது கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதோடு பள்ளிகள் மற்றம் பிற கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் கல்வி கற்கும் சூழல் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மகப்பேறு நலச்சட்டம் 1961 இன் படி, மாநிலத்தில் புதிய குழந்தைப் பராமரிப்பு விதிகளை நடைமுறைப்படுத்தவும் சட்டப்பேரவையில் கேரள அரசு முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து பொது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் பாதுகாப்பான காப்பகங்கள் அமைக்கப்படும் எனவும், பணிபுரியும் தாய்மார்களின் குழந்தைகளுக்காக உயர்தர பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் கிரெச்சுகள் கட்டாயமாக நடத்தப்படுவதை இந்த விதிகள் உறுதி செய்யும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவிகளின் நலனை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், கேரளாவை நாட்டின் Women-friendly மாநிலமாக மாற்றும் அரசின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V