அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

10 ஆம் வுகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; கடந்த ஆண்டை விட 0.5 சதவீத தேர்ச்சி!

தமிழகம் முழுவதும் 2025-026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். 9 லட்சம் பேர் எழுதிய 10 வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளனர். அதன்படி 92.15 சதவீத மாணவர்களும், 96.47 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் அதிகமாகும்.

சாதித்த மாற்றுத்திறனாளிகள் மறற்றும் சிறைவாசிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைவாசிகள் தைரியமாக எதிர்க்கொண்டனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் 13,292 பேர் எழுதிய தேர்வில் 11, 416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதமானது 85.89 சதவீதமாகும். இதே போன்று தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 95.68 சதவீதமாகும்.

100க்கு 100 மதிப்பெண்கள்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிகளவில் 100க் கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியலில் 10,476 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3366 பேரும், கணிதத்தில் 3194 பேரும், ஆங்கிலத்தில் 92 மாணவர்களும், தமிழில் 34 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V