தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து அரசியல் சூழல் அதீத பரபரப்புடன் காணப்படுகிறது. புதிதாக கட்சித் தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகம் தனித்து 108 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கட்சிகளிடமும் தவெக தலைவர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தது. இருந்தாலும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இச்சூழலில் விசிக மற்றும் இடது சாரிகளிடம் தொலைப்பேசி வாயிலாக ஆதரவு கோரியுள்ளார் தவெக விஜய்.
இந்நிலையில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு எவ்வித இடையூறும் தரமாட்டோம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று தி.மு.க எம்.எல்.ஏ நடைபெற்றது. அப்போது பேசிய மு.க ஸ்டாலின் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவதே தங்களுடைய விருப்பம் எனவும், மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோித்த பின்னதாக கட்சி எடுக்கப்போகும் அடுத்த கட்ட முடிவுக்கு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் கட்டுப்பட வேண்டும் என கூறியுள்ளது. அரசியலமைப்பு சிக்கலை ஏற்படுத்தவும், மீண்டும் ஒரு தேர்தலை நடத்தவும் திமுக விரும்பவில்லை என கூறிய மு.க ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் புதிதாக அமையவுள்ள அரசு தொடர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கட்டாயம் புதிய அரசு தொடங்க வேண்டும். மாதம் ரூபாய் 2500 வழங்குவது என்பது கடினம், திமுக அரசு கொடுத்தது போன்று மாதம் ஆயிரம் ரூபாயாவது கட்டாயம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.