தமிழகம் – உத்தர பிரதேசத்தின் கலாசார தொடர்பை போற்றும் காசி தமிழ் சங்கமம் 4.0 டிசம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.

2022 -ம் ஆண்டுமுதல் காசி தமிழ் சங்கமம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், கைவினைக் கலைஞர்கள், ஆன்மிக அறிஞர்கள் என 1,400 பேர் காசிக்கு செல்வர்.

இவர்கள் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள கலாசார தொடர்பை கற்றறிவர்.
காசி சங்கமம் இறுதியாக ராமேசுவரத்தில் நிறைவடையும். இதில் பங்கேற்பதற்கான முன்பதிவு https://kashitamil.iitm.ac.in/ இணையதளத்தில் தொடங்க உள்ளது.

இந்தியாவின் அனைத்து மொழிகளும் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது குறித்தும், தமிழ் செம்மொழி இலக்கியத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்வது குறித்தும் நிகழாண்டு முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.