பிகார் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன. எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் தேர்தல் ஆணையம் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் நவம்பர் 6 ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் ஆகியோர் முதல் கட்டத் தேர்தலில் வாக்களித்தனர்.

இது 1951 -ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இருந்து பதிவான அதிகபட்ச வாக்குகளாகும். இது தேசிய அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

பிகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்
1951 – 42.6 குறைந்தபட்சம்
1957 – 43.24
1962 – 44.47
1967 – 51.51
1969 – 52.79
1972 – 52.79
1977 – 50.51
1980 – 57.28
1985 – 56.27
1990 – 62.04
1995 – 61.79
2000 – 62.57 அதிகபட்சம்
2005 – 46.5 பிப்ரவரி
2005 – 45.38 அக்டோபர்
2010 – 52.73
2015 – 56.91
2020 – 57.29
மொத்தமுதள்ள 243 தொகுதிகளில் 121 க்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 3.75 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.